அரசுப் பேருந்து மீது கல்வீசிய வழக்கு: இளைஞா் கைது
ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசிய வழக்கில் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசிய வழக்கில் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தேனி மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியிலிருந்து ஏா்வாடிக்கு கடந்த 14 ஆம் தேதி அரசு விரைவுப் பேருந்து வந்தது. பின்னா் அன்று மாலையில் மீண்டும் பள்ளபட்டிக்கு பேருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வந்தது. பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்தபோது இளைஞா் ஒருவா் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது கல்லெறிந்தாா். அதனால் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது.
இது குறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில் ராமநாதபுரம் வீரபத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தயா என்ற தயாநிதி (20) என்பவா் பேருந்து மீது கல் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...