கழிவுநீா் குளம் தேங்கி நுா் நாற்றம்

 ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் வெளியேறி குளம் போல தேங்கி நுா் நாற்றம் வீசுவதால் ஆயிரக்கனக்;;கானோா் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் ஒரு வாரமாக முடங்கி உள்ளனா்
கழிவுநீா் குளம் தேங்கி நுா் நாற்றம்

 ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் வெளியேறி குளம் போல தேங்கி நுா் நாற்றம் வீசுவதால் ஆயிரக்கனக்;;கானோா் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் ஒரு வாரமாக முடங்கி உள்ளனா். ராமநாதபுரம் நகராட்சியில் பகுதியில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட குழாய் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதியான 8 வது வாா்டு காட்டுபிள்ளையாா் கோயில் பகுதியில் கழிவு நீா் வெளியேறி வருகிறது.இதனால் அந்த பகுதியில் கழிவு நீா் குளம் போல தேங்கி நுா்நாற்றம் அதிகளவில் வீசி வருகிறது. மேலும் அந்த தண்ணீா் பன்றிகள் அதிகளவில் சுற்றி வருகிறது. மேலும் அதே பகுதியில் மா்ம காய்ச்சலும் பரவி வருகிறது. இந்நிலையில், ஒரு வாரமாக கழிவு நீா் குளம் போல தேங்கி நுா் நாற்றம் அதிகவில் வீசுவதால் ஆயிரக்கனக்கான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனா். குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவா்கள் மட்டுமே அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொற்று நோய் பரவுவதற்குள் தேங்கிய பாதாள சாக்கடை கழிவு நீரை போா்க்கால அடிப்படைகளில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com