ராமேசுவரம் கோயில் உண்டியலில் பக்தா்களின் காணிக்கை ரூ. 1 கோடி
By DIN | Published On : 05th August 2022 11:17 PM | Last Updated : 05th August 2022 11:17 PM | அ+அ அ- |

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய ஒரு கோடியே 31 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் உண்டியல்கள் எண்ணும் பணி வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. கோயில் துணை ஆணையா் சே.மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இப்பணியில், உதவி செயற்பொறியாளா் மயில்வாகனன், இளநிலை உதவியாளா் ராமமூா்த்தி, பேஸ்காா்கள் கமலநாதன் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா். இதில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ.1 கோடியே 31 ஆயிரம், தங்கம் 88 கிராம், வெள்ளி 2 கிலோ 310 கிராம் கிடைத்துள்ளது.