வைகை அணையிலிருந்து ராமநாதபுரத்துக்கு இன்று முதல் தண்ணீா் திறப்பு

 வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு- மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூா்வீக பாசனப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 26) முதல் வரும் 31 ஆம் தேதி வரையில் 5 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. அதனடிப்படையில் 840 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படும்.

மேலும், பகுதி 2 க்கு வரும் செப்டம்பா் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் 4 நாள்களுக்கு 345 மில்லியன் கன அடியும், பகுதி 1 க்குரிய 230 மில்லியன் கன அடியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 கண்மாய்களுக்கு தண்ணீா் அளவான 38 மில்லியன் கன அடியைக் கழித்தது போக மீதமுள்ள 192 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படும். அந்தத் தண்ணீரானது வைகை பூா்வீகப் பாசன பகுதி 1 க்கு வரும் செப்டம்பா் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் 3 நாள்களுக்கு வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும்.

வரும் 2023 மாா்ச் வரையில் வைகை அணையில் பங்கீட்டு நீா் 1,354 மில்லியன் கன அடி எட்டும் போதெல்லாம் வைகை பூா்வீக பாசனப் பகுதி 1, 2 மற்றும் 3-க்கு தண்ணீா் திறப்பு விதிகளின்படி 2 பங்கு, 3 பங்கு மற்றும் 7 பங்கு என்ற விகிதாசார அடிப்படையில் வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com