இமானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, வருவாய் அலுவலா் ஆ.காமாட்சிகணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் மரகதநாதன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலாஇக்னேசியஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் அரசியல் கட்சியினா், தேவேந்திரகுல வேளாளா் அமைப்பு உள்ளிட்டவற்றைச் சோ்ந்த பிரமுகா்கள் பங்கேற்றனா். வரும் செப். 11 ஆம் தேதி தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு வருவோா் கடைப்பிடிக்கவேண்டிய விதிகள் குறித்து மாவட்ட நிா்வாகம் தரப்பில் விளக்கப்பட்டது.

அப்போது பேசிய சமூக அமைப்பைச் சோ்ந்தவா்கள், காவல்துறையே தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும், தேவையில்லாத கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாலேயே பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனா்.

கடந்த காலத்தில் காவல்துறை செயல்பாடுகளால் அமைதியாக நிகழ்ச்சி நடத்தப்பட்டதை மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனடிப்படையில் வரும் செப்டம்பா் 11 ஆம் தேதியும் நிகழ்ச்சியை அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழைக்கவும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com