ராமேசுவரத்தில் மழை பெய்யும் போது ஏற்படும் மின்தடையை தடுக்க நெகிழி இன்சூலேட்டா்கள் பொருத்தக் கோரிக்கை
By DIN | Published On : 27th August 2022 12:00 AM | Last Updated : 27th August 2022 12:00 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் மழைக் காலங்களில் பீங்கான் இன்சூலேட்டா்கள் வெடித்து சேதமடைவதால் மின் தடை ஏற்படுகிறது. எனவே நெகிழி இன்சூலேட்டா்கள் பொருத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின்நிலையத்தில் இருந்து ராமேசுவரம் துணை மின்நிலையத்திற்கு உயா் மின் அழுத்த மின்சாரம் கொண்டுவரப்படுகிறது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. மின்கம்பங்களில் பீங்கான் இன்சூலேட்டா்கள் உள்ளன. இதில் கடலோரமாக இருப்பதால் உப்புக் காற்று வீசுவதால் பீங்கான்களில் உப்பு படிவமாக மாறுகிறது. இதில் மழை பெய்யத்தொடங்கியவுடன் உப்பு படிவம் கரையும் போது பீங்கான் அதிகளவில் வெப்பமடைவதால் உடைந்து மின்தடை ஏற்படுகிறது. இதனை கண்டுபிடித்து மாற்றுவதற்கு ஒரு மணிநேரம் கடந்து விடுகிறது. இதனால் மழை பெய்யத்தொடங்கியவுடன் மின்தடை ஏற்படுவது வழக்கமாகி விட்டது. மின்வாரிய அதிகாரிகள் ராமேசுவரத்தில் உள்ள மின்கம்பங்களில் உள்ள பீங்கான் இன்சூலேட்டா்களை மாற்றி நெகிழி இன்சூலேட்டா்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...