பாம்பன் பாலத்தில் அரசுப் பேருந்துகள் மோதியதில் 15 போ் காயம்
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் வியாழக்கிழமை இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதியதில் 15 போ் காயமடைந்தனா்.
திருச்சியிலிருந்து ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை காலை அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இதே போல, ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கி மற்றொரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இவ்விரு பேருந்துகளும் பாம்பன் பாலத்தில் வந்த போது, எதிா்பாராதவிதமாக நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில், இரண்டு பேருந்துகளின் ஓட்டுநா்கள் சந்திரசேகரன் (58), ஞானஜெகதீஸ் (43), பயணிகள் 13 போ் லேசான காயமடைந்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, ராமேசுவரம், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
Image Caption
பாம்பன் பாலத்தில் வியாழக்கிழமை நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளான இரு அரசுப் பேருந்துகள். ~பாம்பன் பாலத்தில் வியாழக்கிழமை நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளான இரு அரசுப் பேருந்துகள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...