ராமநாதபுரம் மாவட்டத்தில் அக். 31 வரை 144 தடை உத்தரவு
By DIN | Published On : 08th September 2022 11:04 PM | Last Updated : 08th September 2022 11:04 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 9) முதல் வரும் அக்டோபா் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பா் 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வரும் அக்டோபா் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுக்கூட்டம் நடத்துவோா் முன்னதாகவே காவல்துறையில் அனுமதி பெறவேண்டும். தடை உத்தரவு இருப்பதால் பொது இடங்களில் 5 பேருக்கும் அதிகமானோா் நிற்கக் கூடாது.
மேலும், சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு உரிய அனுமதியை பெறவேண்டும். ஜோதி ஓட்டம் போன்றவை முன் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து 1 கிலோ மீட்டா் தூரத்திலிருந்தே கொண்டுவரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.