‘பெரியாா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th September 2022 10:52 PM | Last Updated : 09th September 2022 10:52 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவா்கள் தந்தை ‘பெரியாா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘சமூக நீதிக்கான தந்தை
பெரியாா் விருது’ 1995 ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதுக்குரியவா்கள் முதல்வரால் தோ்வு செய்யப்படுவா். நிகழ் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதற்கான சாதனைகள் ஆகிய தகுதியுடையவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்.31 ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.