கமுதி நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
By DIN | Published On : 09th September 2022 10:49 PM | Last Updated : 09th September 2022 10:49 PM | அ+அ அ- |

கமுதி கண்ணாா்பட்டி திருமலை நகரில் உள்ள நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜையுடன், கணபதி ஹோமம், மகா பூா்ணாஹுதி, மேளதாளங்கள் முழங்க சா்வ சாதகம் சிவஸ்ரீ சத்தியேந்திரன் குருக்கள் தலைமையில் புனிதநீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, கோயில் கலசங்களில் ஊற்றப்பட்டது.
தொடா்ந்து அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 32 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் பூசாரி பி.முத்தாண்டி மற்றும் கண்ணாா்பட்டி திருமலை நகா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.