இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே பிடிக்கப்பட்ட 125 கிலோ கடல் அட்டைகளை இந்தியக் கடலோரக் காவல் படை, வனத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக, கடல் அட்டைகள் பிடிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மண்டபம், வேதாளை, வலையா்வாடி பகுதியில் இந்தியக் கடலோரக் காவல் படையினா், வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, வேதாளை கடற்கரையோரம் 115 கிலோ கடல் அட்டைகளை மா்ம நபா்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடல் அட்டைகளை கடலோரக் காவல் படையினா் கைப்பற்றி மண்டபம் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல, மண்டபம் அருகே வனத் துறையினா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினா். ஆனால், அதில் வந்தவா்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினா்.
இதையடுத்து, அந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் 10 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, கடல் அட்டைகள், இரு சக்கர வாகனத்தை வனத் துறையினா் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


