தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தில்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! தில்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணைபோகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டின் பின்னணியில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், குறிப்பாக, மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் முக்கியமாக தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் உள்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்த மசோதா தொடர்பான சிறப்புக் கூட்டத்தொடரில் மொத்தமுள்ள 535 உறுப்பினர்களில் 489 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக 298 பேரும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கான 326 வாக்குகள் தேவை என்ற நிலையில், 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், இந்த மசோதா தோல்வியடைந்தது.
இதனுடன் கொண்டுவரப்படவிருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்படவில்லை.
Summary
Chief Minister MK Stalin's Post on 'X' Regarding the Defeat of the Constituency Delimitation Bill
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்
மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


