நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

சிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்

சிங்கப்பெண் காவல் படை குறித்து முதல்வர் விஜய் அறிவிப்பு...

News image

முதல்வர் விஜய் - TVK live

Updated On :1 ஜூன் 2026, 5:18 pm IST

சிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் முதல்வர் விஜய் பேசுகையில்,

"நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு செய்த சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.

200 யூனிட் மின்சாரத்தில் 100 யூனிட் மின்சாரம் திமுக கொடுத்தது அல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தது.

ஸ்டாலின் சார் பதவிபோன கடுப்பில் அறிக்கையாக விடுகிறார். டாஸ்மாக் மூலமாக நீங்கள் பணம் சம்பாதித்தீர்கள். ஆனால் நாங்கள் மக்களுக்கு தொந்தரவாக இருந்த மதுக்கடைகளை மூடினோம்.

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி.. இந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தோம்.

நிதி நெருக்கடி ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார்கள். அதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா? விஜய் பொய் சொல்லி அரசியல் செய்ய வரவில்லை. அதனால் விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்.

தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரம் பரவி கிடக்கிறது. அதைத் தடுத்திருந்தால் இதனை பெண்களை, பெண் குழந்தைகளை இழந்திருப்போமா? எல்லாம் செய்துவிட்டு என் மீது பழிபோடுகிறார்கள்.

சிறந்த காவல் துறை அதிகாரிகள் அடங்கிய சிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும். வழக்குகள் அனைத்து விரைவாக விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை விரைவாக தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கவும் சொல்லியிருக்கிறோம்" என்றார்.

Summary

Singappen Police Force to be Launched Next Week: Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.