நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

முதல்வர் விஜய்யுடன் தில்லி சென்ற 8 பேர்! யார் யார் தெரியுமா?

முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தில்லி சென்ற விஜய்யுடன் இருந்தவர்கள் யார்? என்பது பற்றி...

News image

தில்லியில் முதல்வர் விஜய்.

Updated On :27 மே 2026, 8:30 pm IST

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக தில்லி புறப்பட்ட முதல்வர் ஜோசப் விஜய்யுடன் சென்றவர்கள் யார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இன்று காலை தில்லி புறப்பட்டார்.

அவர், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து இன்று (மே 27) காலை 9.30 மணியளவில் புறப்பட்ட முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டார்.

தில்லிக்குச் சென்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார்.

இரண்டு நாள்கள் பயணத்தில் நாளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விஜய் சந்திக்கவுள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யுடன் சென்றவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய்யுடன், பி. ஜெகதீஷ், விஷ்ணு ரெட்டி, பி. ராம்குமார், ஜெகதீஷ் அவஸ்தி, சி. ராஜேந்திரன், நயீம் அயித்தண்டி கூவகண்டி, ஜி. செந்தில்குமார் மற்றும் நரிசெட்டி மரியா ஜோசப் அனில் ஆகியோர் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநர் மாளிகைக்குச் செல்லும்போது விஷ்ணு ரெட்டியை முதல்வர் விஜய் அழைத்துச் சென்றிருந்தார். கிரானைட் தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கிரானைட் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஷீரடி சாய் பாபா கோயிலில் விஜய் தரிசனம் செய்யும் போதும் விஷ்ணு, அவர் மனைவி நேத்ரா ரெட்டி மற்றும் மகள் நேஹா ரெட்டியுடன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Details have emerged regarding the individuals who accompanied Chief Minister Joseph Vijay on his official visit to Delhi—his first such trip since assuming office as the Chief Minister of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.