9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

வாழ்த்துகள் அண்ணா... முதல்வர் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ்!

முதல்வர் விஜய்யைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ்...

News image

முதல்வர் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ்

Updated On :26 மே 2026, 3:01 pm IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல்வர் விஜய்யைச் சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர், இயக்குநர் என யாராவது குறுகிய காலங்களிலேயே பெரிய உச்சத்திற்கு செல்வார்கள். அப்படி, தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குவதிலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்வதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் என்கிற நல்ல படம் அடுத்தடுத்த படங்களுக்கான கதவுகளைத் திறந்து வைத்தாலும் கைதி திரைப்படமே லோகேஷை முக்கியமான இயக்குநராக மாற்றியது. அப்படத்தின் வெற்றியால் வணிக ரீதியாக பெரிய பட்ஜெட்கள் கிடைக்க மாஸ்டர், விக்ரம் என வெற்றிப்படங்கள் கொடுத்தார்.

தொடர்ந்து, லியோ மூலம் இந்தியளவில் ஆக்சன் இயக்குநருக்கான பட்டியலிலும் லோகேஷ் இணைந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் தமிழில் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கிய முதல் இயக்குநர் என்கிற பெயருடன் கூலியை இயக்கினார்.

இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் முதல்வர் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர், லியோ ஆகியவை உருவாக்க ரீதியாக விஜய் ரசிகர்களிடம் திருப்தியைக் கொடுத்தது. அப்படங்களின் பின்னணி இசைகள் இன்றும் அதிகம் கேட்கப்பட்டு வருகின்றன. லியோ - 2 திரைப்படத்தை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் அரசியலுக்கு வந்து முதல்வராகவும் ஆகிவிட்டார்.

இந்த நிலையில், நேரில் அவரைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், “மாண்புமிகு முதலமைச்சர்.... வாழ்த்துகள் அண்ணா” என பதிவிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

Director Lokesh Kanagaraj has met Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.