25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்காதது குறித்து...

R.J. Balaji, Lokesh Kanagaraj.

ஆர்.ஜே. பாலாஜி, லோகேஷ் கனகராஜ். - ENS

Published On :30 ஏப்ரல் 2026, 12:32 pm IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடந்துமுடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்காதது குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 85.15% வாக்குகள் பதிவாகின. இதையடுத்து மே 4 அன்று தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் நடிகராக இருந்து கட்சியை ஆரம்பித்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினால் அரசியல் களம் மிகுந்த சூடிபிடித்தது. இளைஞர்கள், பெண்களும் இரவெல்லாம் பேருந்து நிலையங்களில் காத்திருந்து, பயணித்து ஆர்வமாக வாக்களித்தார்கள்.

ரத்னகுமார் இயக்கிய 29 என்ற படத்தின் முன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இது குறித்து பேசியிருப்பதாவது:

லோகேஷ் கனகராஜ் எனது நண்பர். தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அவருக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறேன். டிசி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது எனத் தெரியும். அதனால், தலைமுடியையும் தாடியையும் வெட்டுங்கள். முகத்தினை தேட வேண்டியிருக்கிறது.

சென்னையில் வாக்களித்துவிட்டு, மும்பைக்கு கிரிக்கெட் வர்ணனை செய்ய கிளம்பினேன். அப்போது, லோகேஷ் கனகராஜ் சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல வந்திருந்தார். அவரும் வாக்களிக்கவே வந்திருந்தார். ஆனால், கேட் மூடப்பட்டதால் அவரால் வாக்களிக்க செல்ல முடியவில்லை எனக் கூறினார்.

ஏற்கெனவே, லோகேஷ் கனகராஜ் மீது கூலி திரைப்பட விமர்சனங்களால் சமூக வலைதளத்தில் கிண்டல் அதிகரித்து வரும் நிலையில், ஆர்.ஜே. பாலாஜி கூறியதும் அதை அதிகரிக்கும் விதமாகவே மாறியுள்ளது.

Summary

Why didn't Lokesh Kanagaraj vote in elections? RJ Balaji reveals the real reason

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.