/

கிண்டலுக்கு ஆளான லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்...

News image

நடிகர் விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் .

Updated On :12 ஏப்ரல் 2026, 8:58 am

சமூக வலைதளங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். கூலி கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்ததால் வெற்றியைக் கொடுக்க வேண்டிய நெருக்கடியிலும் உள்ளார்.

இதற்கிடையே, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். கோடை வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக பலரும் கண்டனம் தெரிவித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். முக்கியமாக, லோகேஷ் கனகராஜும், “படத்தில் பணியாற்றிய ஆயிரம் பேரின் கனவு தகர்க்கப்பட்டிருக்கிறது. படக்குழுவினருக்கு ஆதரவாகத் துணை நிற்போம்” எனக் கூறியிருந்தார்.

ஜன நாயகனில் இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் விஜய்யிடம் பேசும் கிளைமேக்ஸ் காட்சி இடம்பெற்றிருந்ததாகத் தெரிகிறது.

இதில், லோகேஷ் நடிகர் விஜய்யிடம், “மாற்றும் வருமா?” கேட்கிறாராம். இதனைக் குறிப்பிட்டு ரசிகர்கள் லோகேஷின் பதிவில் அவரைக் கிண்டலடித்து வருகின்றனர்.

லோகேஷின் புகைப்படத்தைக் கேலியாகச் சித்திரித்து, “மாற்றம் வருமா?” எனக் கேட்கின்றனர். சம்மந்தமே இல்லாமல் லோகேஷ் கனகராஜ் திடீரென கிண்டலுக்கு ஆளானது ரசிகர்களிடம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

director lokesh kanagaraj facing trolls by fans on social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.