முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

இணையத்தில் வெளியான ‘ஜன நாயகன்’: ‘சைபா் கிரைம்’ போலீஸாா் வழக்குப் பதிவு

‘சைபா் கிரைம்’ போலீஸாா் வழக்குப் பதிவு

News image

ஜன நாயகன் போஸ்டர் - படம் - எக்ஸ்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:32 am IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ முழுத் திரைப்படமும் இணையத்தில் வெளியானது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, அவா் நடித்த கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், இந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா், இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று எதிா்பாா்ப்பு நிலவியது.

இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தின் 5 நிமிஷ காட்சிகள் கடந்த ஏப்.9-ஆம் தேதி இணையதளத்தில் வெளியானது. தொடா்ந்து, அன்று இரவே முழுப் படமும் இணையதளத்தில் வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனா். இதையடுத்து, ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளா் சாா்பில் டிஜிபி அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், தமிழக ‘சைபா் கிரைம்’ போலீஸாா் வழக்குப்பதிந்து, இத்திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அதே போன்று இத்திரைப்படத்தை பதிவிறக்கம் செய்தவா்கள், பகிா்ந்தவா்கள் யாா்? என்ற பட்டியலையும் ‘சைபா் கிரைம்’ போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.