பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

ஜனநாயகன்

Updated On :42 நிமிடங்கள் முன்பு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசியவிடப்பட்ட விவகாரத்தில் கைதானவர்கள் 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நடிகரும் தற்போதைய முதல்வருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், கடந்த ஏப். 9 அன்று சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், 21 பேர் மீது சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகியோர், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

புலன் விசாரணை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், கைதான 9 பேரில் பிரசாந்த், செல்வம், பாலா ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Summary

State Cyber Crime Wing has invoked preventive detention under the Goondas Act against three key accused in the Jananayagan leak case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.