கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஜன நாயகன் படம் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றக் காவலில் அடைப்பு

'ஜன நாயகன்' படத்தை ஆன்லைனில் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளது குறித்து...

News image

ஜன நாயகன் போஸ்டர் - படம் - எக்ஸ்

Updated On :12 ஏப்ரல் 2026, 11:55 pm IST

ஜன நாயகன் படத்தை ஆன்லைனில் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளதாகவும், குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் முழுத் திரைப்படமும் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 10) அதிகாலை இணையத்தில் வெளியானது.

இது குறித்து சைபர் குற்ற பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், ஜன நாயகன் ஆன்லைனில் கசிய விடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக 6 பேர் இன்று (ஏப். 12) காவல் துறையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு இணையவழி குற்ற தடுப்பு பிரிவானது, பல டிஜிட்டல் தளங்களில் ஜனநாயகன் திரைப்படத்தின் அங்கீகரிக்கப்படாத இணைய கசிவு தொடர்பான புகாரின் பேரில் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக, மாநில சைபர் குற்ற விசாரணை மையத்தில் குற்ற எண் 47/2026 பாரதிய நியாயா சன்ஹிதா(பி.என்.எஸ்) தகவல் தொழில்நுட்பச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம் மற்றும் சினமாடோகிராஃப் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மீறப்பட்ட யுஆர்எல்களை அடையாளம் கண்டு தடுப்பது, டிஜிட்டல் தடவியல் பகுப்பாய்வு மற்றும் தொடர் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் விசாரணை மூலம் கண்டுபிடிப்பது போன்ற வழக்கின் பல்வேறு அம்சங்களைக் கையாள சைபர் குற்றப் பிரிவில் பல சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. டிஜிட்டல் ஆதாரங்களின் விசாரணை மற்றும் பகுப்பாய்வின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், கிளவுட் ஸ்டோரேஜ் தளங்கள் மூலம் பதிவேற்றுதல் மற்றும் டிரைவ் இணைப்புகளைப் பகிர்வதில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்ட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் இருந்து டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

திருட்டு உள்ளடக்கம் பரவுவதைத் தடுக்க இணையவெளியில் தொடர் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதுவரை, சுமார் 300 மீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் அடையாளம் காணுதல் மற்றும் நீக்குதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொதுமக்களுக்கான அறிவுரை

ஜன நாயகன் அல்லது பிற பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களின் திருட்டை பிரதிகளைப் பதிவிறக்கம் செய்யவோ, ஸ்ட்ரீம் செய்யவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒரு கைது செய்யப்பட கூடிய குற்றமாகும். மேலும் தகுந்த சட்டங்களின் கீழ் தண்டனைகள் உள்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சமூக ஊடகங்கள், செய்தியிடல் தளங்கள் அல்லது வலைத்தளங்கள் மூலம் திருட்டு உள்ளடக்கத்தை தெரிந்தே பரப்பும் அல்லது ஊக்குவிக்கும் நபர்கள் மீது கடுமையான எடுக்கப்படும்.

புகார் அளிக்க இதுபோன்ற இணைப்புகள் பார்க்க நேர்ந்தாலும் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்திருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ தொடர்புகொண்டு புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யுமாறு கூறியுள்ளது.

Summary

The Tamil Nadu Police have stated that six individuals have been arrested and remanded to judicial custody in connection with the online leak of the film 'Jana nayagan'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.