தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

ஜன நாயகன் வெளியீடு எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

ஜன நாயகன் வெளியீடு மற்றும் திரைத்துறை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தது தொடர்பாக...

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 9:58 am IST

ஜன நாயகன் வெளியீடு மற்றும் திரைத்துறை குறித்து திரைப்படத் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

ஜன நாயகன் திரைப்படத்தை தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பிறகுதான் வெளியிட முடியும். அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஜன நாயகன் மட்டுமல்ல; எந்தத் திரைப்படமாக இருந்தாலும் முறைப்படி அதற்கு உரிய சான்றிதழ்களை பெற்றுத்தான் வெளியிட முடியும்.

திரைத்துறை என்பது மக்களுடைய அன்றாட வாழ்க்கையோடு இணைந்தது. மிகவும் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு அது தெரபி. திரைத்துறை என்பது பெரிய தலைவர்களை உருவாக்கிய தாய்மடி. எங்கள் முதல்வரே அங்கிருந்து வந்தவர்தான்.

ஆகையால், திரைத்துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து அதில் எவற்றை நிர்வாக ரீதியாக சரிசெய்ய வேண்டுமோ அதை சரிசெய்து, நிதி தொடர்பான கோரிக்கைகளையும் பரிசீலணை செய்து, முதல்வர் விஜய்யுடன் கலந்தாலோசித்து அவருடைய அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொன்றாக சரிசெய்யப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Summary

Film Technology Minister Rajmohan made statements on Saturday regarding the release of Jananayagan and the film industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.