ஜன நாயகன் படத்துக்கான சம்பளத்தை நடிகர் விஜய் திருப்பிக் கொடுத்ததாகத் தெரிவித்த சிறந்த செயல் என நடிகை அம்பிகா கூறியுள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய், கடைசியாக ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், திரைப்படச் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கி, படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலும் வந்ததால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
இதனிடையே, இணையதளங்களில் சட்டவிரோதமாக ஜன நாயகன் படம் கசிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விஜய்யுடன் நடிகை அம்பிகா - கோப்புப் படம்
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே ஜன நாயகன் கசிந்ததால், நடிகர் விஜய் தனது சம்பளத்தை தயாரிப்பாளரிடமே திருப்பி அளித்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களோ அதிகாரபூர்வமாகவோ எதுவும் வெளிவரவில்லை.
படத்துக்கான சம்பளத்தை விஜய் திருப்பியளித்தாகக் கூறப்படுவதற்கிடையில், நடிகை அம்பிகா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, விஜய்யின் சம்பளத்தைத் தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். உண்மையெனில், அது ஒரு சிறந்த செயல் என்று கூறியுள்ளார்.
Summary
Did Actor Vijay return the salary for the movie Jana Nayagan?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டவிரோத வெளியீட்டால் ஜன நாயகனுக்கு ரூ. 70 கோடி இழப்பு?

ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி
மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ’ஜன நாயகன்’ பார்த்தவர் கைது!

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
வீடியோக்கள்

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


