சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஜன நாயகன் படம் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் வெளியாவதில் தாமதம் நீடித்து வருகின்றது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி சட்டவிரோதமாக ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்.
மேலும், ஜன நாயகன் திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சிசிடிவி கண்காணிப்பு அறையில் அமர்ந்து ஜன நாயகன் படம் பார்த்த யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசிடிவி அறையில் அமர்ந்து ஜன நாயகன் படம் பார்ப்பதை புகைப்படம் எடுத்து, ‘ஓட்டு பெட்டி வர இடத்துல கூட நம்ம தளபதி என்ட்ரி தான்’ என முகநூலில் அவர் பதிவிட்டிருந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Summary
Person arrested who viewed Jana Nayagan in the strongroom's CCTV room
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
ஜன நாயகன் லீக்! விஜய் சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா? நடிகை பாராட்டு

சட்டவிரோத வெளியீட்டால் ஜன நாயகனுக்கு ரூ. 70 கோடி இழப்பு?
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

