ஜனநாயகன் திரைப்படத்தை இணையளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுவை நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துளளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் முழுத் திரைப்படமும் கடந்த ஏப். 10ஆம் தேதி இணையத்தில் வெளியானது.
படத் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 9 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, அவா் நடித்த கடைசிப்படமாக ஜன நாயகன் அமைந்தது.
பொங்கல் விடுமுறையை இலக்கு வைத்து, ஜனவரியில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், இந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு படம் வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இணையத்தில் முழுப் படமும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Summary
The court on Saturday rejected the bail pleas of 9 people arrested in connection with the online release of the film Jana Nayagan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
ஜன நாயகன் லீக்! விஜய் சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா? நடிகை பாராட்டு

சட்டவிரோத வெளியீட்டால் ஜன நாயகனுக்கு ரூ. 70 கோடி இழப்பு?
மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ’ஜன நாயகன்’ பார்த்தவர் கைது!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

