சென்னை : நடிகர் அஜித் குமாரின் தாயாரது உடலுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சனிக்கிழமை (மே 30) இரவில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பின் காரணமாக இன்று (மே 30) காலை காலமானார். அன்னாரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்த அஜித் குமார் இன்றிரவில் தாயகம் திரும்பி வீட்டுக்குச் சென்றடைந்துள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் - எக்ஸ்
முன்னதாக, முதல்வர் விஜய் இன்று காலையில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் குடும்பத்தின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மோகினி மணி உடலுக்கு அஜித் வருகைக்குப் பின் முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Summary
Ajith Kumar's mother demise - Chief Minister Vijay pays homage to the mortal remains of actor Ajith Kumar's mother.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஜித்குமார் தாயார் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்

அஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்

கிரிக்கெட் விளையாடிய அஜித்... விடியோ வைரல்!
அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் அறிமுக விடியோ!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


