அஜித்குமார் தாயார் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மறைவுக்கு, தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் தெரிவித்துள்ள இரங்கல் குறித்து...

CM Condolence Message-Actor Ajith Kumar mother's death

அஜித்,- விஜய் - கோப்புப்படம்

Published On :30 மே 2026, 12:10 pm IST

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மறைவுக்கு, தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி (84) சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Summary

Regarding the condolences expressed by Chief Ministe Joseph Vijay on the passing of actor Ajith Kumar's mother, Mohini...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.