உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

TN Government

தமிழ்நாடு அரசு.

Published On :
5:41 am, 30 மே 2026

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்

நடிகரும் ரேஸருமான அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (84) சென்னையில் இன்று காலை காலமானார்.

தாயாரின் மறைவுச் செய்தியறிந்து, துபையில் இருந்த அஜித் சென்னை விரைந்துள்ளார்.

5:45 am, 30 மே 2026

தங்கம் விலை நிலவரம்...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று(சனிக்கிழமை) ரூ. 240 உயர்ந்துள்ளது.

5:45 am, 30 மே 2026

அஜித்குமாரின் தாயார் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

5:47 am, 30 மே 2026

வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல: இந்திய கம்யூனிஸ்ட்

வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

6:01 am, 30 மே 2026

திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்?

திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க முதல்வர் விஜய் செல்லவுள்ளதாகத் தகவல்...

6:38 am, 30 மே 2026

தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!

ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டச் செயலாளரும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சரத்குமார் அறிவித்துள்ளார்.

6:50 am, 30 மே 2026

சுவாமிமலையில் வைகாசி விசாகம்!

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

7:13 am, 30 மே 2026

பெங்களூர் பள்ளியில் தீ விபத்து!

பெங்களூரில் உள்ள தனியார் பள்ளி கட்டடத்தில் சனிக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

7:42 am, 30 மே 2026

தேசிய சுகாதார இயக்கத்துக்கு நீதி ஒதுக்கீடு!

மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய சுகாதார இயக்கத்தை அமல்படுத்தத் தயாராகி வருவதாகவும், இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 2,103 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.

8:26 am, 30 மே 2026

பருவமழை எப்போது தொடங்கும்?

தமிழகத்தில் 5 நாள்களுக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

9:09 am, 30 மே 2026

இதுதான் அவர்கள் சொன்ன மாற்றமா? தவெக அரசுக்கு ஜவாஹிருல்லா கேள்வி

"எதிரணியில் போட்டியிட்டவர்களையும், தன் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்தவர்களையும்கூட புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் இழுப்பது என்பது ஜனநாயகத்தின் அற வழி அல்ல.

இதுதான் அவர்கள் (தவெக) சொன்ன மாற்றமா?" என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி

10:40 am, 30 மே 2026

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்!

ராஜஸ்தானின் பிகானேரில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

10:53 am, 30 மே 2026

வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் மயக்கம்?

திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி கூட்ட நெரிசலால் பக்தர்கள் சிலர் மயக்கமடைந்துள்ளனர்.

12:37 pm, 30 மே 2026

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மயக்கம்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

12:42 pm, 30 மே 2026

அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

1:49 pm, 30 மே 2026

க்யூட் தேர்விலும் பிரச்சினை: தேர்வர்கள் கடும் அதிருப்தி! என்ன நடந்தது?

2:02 pm, 30 மே 2026

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2:46 pm, 30 மே 2026

ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு

கர்நாடக முதல்வராக பதவியேற்குமாறு டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் கெலாட் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

3:06 pm, 30 மே 2026

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

மகள் கண் முன்னே அப்பா படுகொலை... தனிப்படை அமைத்து விசாரணை!

4:01 pm, 30 மே 2026

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!

4:31 pm, 30 மே 2026

நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

4:48 pm, 30 மே 2026

பருத்தி இறக்குமதி சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு: மத்திய அரசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.