நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!

நாளை ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் பலப்பரீட்சை...

News image

ஐபிஎல் கொண்டாட்டம்... - Center-Center-Bangalore

Updated On :30 மே 2026, 9:31 pm IST

பெங்களூரு : பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை(மே 31) பொது இடங்களிலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் எல்இடி திரைகள் அமைத்து ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரலையில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாக பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது சீசன், கொல்கத்தாவில் மாா்ச் 22 தொடங்கியது. அகமதாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை(மே 31) நடைபெறும் இதன் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

பெங்களூரு மாநகரில் கடந்த ஆண்டில், ஜூன் 4-இல் நடைபெற்ற ஐபில்எல் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில்11 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த விபரீதத்தை கருத்திற்கொண்டு, அதைப்போன்றதொரு அசம்பாவிதம் நடைபெறாமலிருக்க, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை(மே 31) பொது இடங்களிலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் எல்இடி திரைகள் அமைத்து ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரலையில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து, பெங்களூரு மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், ஐபில் இறுதி ஆட்டம் முடிவுகள் வெளியான பின், பொது இடங்களில் பைக் பேரணிகள், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாலைகளில் சாகசம் செய்தல், சாலைகளில் திரண்டு கொண்டாடுதல், பட்டாசுகள் வெடித்தல் போன்ற எந்தவொரு கொண்டாட்டத்துக்கும் பொது இடங்களில் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

IPL final Royal Challengers Bengaluru (RCB) looking to win a second consecutive win in the IPL 2026 final this Sunday, May 31, Bengaluru City Police says No public celebrations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.