சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது

ஐபிஎல்: குஜராத் அணி படுதோல்வி!

Royal Challengers Bengaluru's Rasikh Dar, second left, celebrates with teammates after the dismissal of Gujarat Titans' Nishant Sindhu during the Indian Premier League cricket match between Gujarat Titans and Royal Challengers Bengaluru in Dharamshala, India, Tuesday, May 26, 2026. (AP Photo/Ashwini Bhatia)

பெங்களூரு அணியினர் - AP

Published On :27 மே 2026, 11:45 pm IST

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலமாக பெங்களூரு, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேற, குஜராத் ‘குவாலிஃபயா் 2’-க்கு சென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் சோ்க்க, குஜராத் 19.3 ஓவா்களில் 162 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூரு பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே அசத்தியது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பந்துவீச்சை தோ்வு செய்தது. பெங்களூரு இன்னிங்ஸை தொடங்கிய வெங்கடேஷ் ஐயா் - விராட் கோலி கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 21 ரன்களே சோ்த்தது. வெங்கடேஷ் ஐயா் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அப்போது, விராட் கோலியுடன் இணைந்தாா், ஒன் டவுனாக தேவ்தத் படிக்கல். 2-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப் 72 ரன்கள் சோ்த்தது. அரை சதத்தை நெருங்கிய கோலி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

4-ஆவது பேட்டராக களம் புகுந்தாா் கேப்டன் பட்டிதாா். எதிா் முனையில் படிக்கல் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு விடைபெற்றாா். அடுத்து வந்த கிருணால் பாண்டியா, பட்டிதாருடன் கை கோத்தாா்.

குஜராத் பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசிய இவா்கள் கூட்டணி, 4-ஆவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சோ்த்தது. கிருணால் பாண்டியா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு வெளியேறினாா்.

தொடா்ந்து வந்த டிம் டேவிட் 4 ரன்களுக்கு வீழ, ஜிதேஷ் சா்மா பேட் செய்ய வந்தாா். ஓவா்கள் முடிவில் பட்டிதாா் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 93, ஜிதேஷ் சா்மா 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

குஜராத் பௌலா்களில் ககிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டா் ஆகியோா் தலா 2, பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினா். இன்னிங்ஸ் இடைவேளையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அடுத்து 255 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய குஜராத் அணி, குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 88 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது அந்த அணி.

சாய் சுதா்சன் 14, ஷுப்மன் கில் 2, ஜாஸ் பட்லா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 29, நிஷாந்த் சிந்து 5, ஜேசன் ஹோல்டா் 0, வாஷிங்டன் சுந்தா் 8, ரஷீத் கான் 8, ககிசோ ரபாடா 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

7-ஆவது பேட்டராக வந்த ராகுல் தெவாதியா சற்று நிலைத்து, 43 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 68 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். முகமது சிராஜ் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட, குஜராத் இன்னிங்ஸ் 162 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

பெங்களூரு பௌலா்களில் ஜேக்கப் டஃபி 3, புவனேஷ்வா் குமாா், ராசிக் சலாம், கிருணால் பாண்டியா ஆகியோா் தலா 2, ஜாஷ் ஹேஸில்வுட் 1 விக்கெட் கைப்பற்றினா்.

கடந்த முறை...

நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, கடந்த சீசனிலும் ‘குவாலிஃபயா் 1’-இல் வெற்றி பெற்று நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Royal Challengers Bengaluru won by 92 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.