சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

ஐபிஎல் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்துள்ளது.

RCB Captain Rajat Patidar drives the ball to the boundary.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Published On :26 மே 2026, 9:37 pm IST

ஐபிஎல் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் இன்று நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட் செய்தது.

ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரஜத் படிதார் அதிகபட்சமாக 33 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, விராட் கோலி மற்றும் க்ருணால் பாண்டியா தலா 43 ரன்கள் எடுத்தனர். தேவ்தத் படிக்கல் 30 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 19 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 15 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ககிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

Summary

Batting first in the Qualifier 1 match of the IPL series, Royal Challengers Bangalore scored runs for the loss of 5 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.