ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் முதலில் விளையாடியது.
திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நமன் திர் 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ரோஹித் சர்மா 22 ரன்களும், ராஜ் பவா 16 ரன்களும் எடுத்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஷ் ஹேசில்வுட், ராஷிக் சலாம் தர் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்ட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in the IPL match against Royal Challengers Bangalore, Mumbai Indians scored 166 runs for the loss of 7 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா

திலக் வர்மா சதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


