ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் விளையாடியது.
ஜோஷ் இங்லிஷ் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 204 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது.
லக்னௌ அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அதிரடியாக விளையாடிய அவர் அதிகபட்சமாக 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷபாஸ் அகமது 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அக்ஷத் ரகுவன்ஷி 18 ரன்கள், ஹிம்மத் சிங் 17 ரன்கள், கேப்டன் ரிஷப் பந்த் 15 ரன்கள், மிட்செல் மார்ஷ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சிஎஸ்கே தரப்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நூர் அகமது ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
உர்வில் படேல் அதிரடி; புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே முன்னேற்றம்!
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் அதிகபட்சமாக 23 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்கள், சஞ்சு சாம்சன் 28 ரன்கள், கார்த்திக் சர்மா 20 ரன்கள், பிரசாந்த் வீர் 18* ரன்கள், ஷிவம் துபே 15* ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம், சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.
Summary
In the IPL series, Chennai Super Kings defeated Lucknow Super Giants by 5 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சன்ரைசர்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; தோனி விளையாடவில்லை!

லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஸ்பென்சர் ஜான்சன்!

ஜோஷ் இங்லிஷ் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 204 ரன்கள் இலக்கு!

சிஎஸ்கே பந்துவீச்சு: அணியில் மாற்றமில்லை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




