ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் விளையாடியது.
ஜோஷ் இங்லிஷ் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 204 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னௌ அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அதிரடியாக விளையாடிய அவர் அதிகபட்சமாக 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷபாஸ் அகமது 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அக்ஷத் ரகுவன்ஷி 18 ரன்கள், ஹிம்மத் சிங் 17 ரன்கள், கேப்டன் ரிஷப் பந்த் 15 ரன்கள், மிட்செல் மார்ஷ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சிஎஸ்கே தரப்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நூர் அகமது ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.
Summary
In the IPL match against Chennai Super Kings, Lucknow Super Giants, batting first, scored 203 runs for the loss of 8 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே பந்துவீச்சு: அணியில் மாற்றமில்லை!

மிட்செல் மார்ஷ் சதம் விளாசல்; ஆர்சிபிக்கு 210 ரன்கள் இலக்கு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

லக்னௌவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை


