சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா குறித்து...

Hardik Pandya

ஹார்திக் பாண்டியா - படம்: முகநூல் / ஹார்திக் பாண்டியா.

Published On :26 மே 2026, 7:36 pm IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்று புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருப்பதால், பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பிழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிறந்த கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா 2023 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்றார். ஆனால், 3 சீசனில்களில் ஒருமுறை மட்டுமே பிளே ஆஃப் சென்றது.

நடப்பு சீசனில் மிகவும் மோசமாக விளையாடியதால் ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சி பொறுப்பு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வந்தால் மிகவும் சிறப்பாக இருக்குமென பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில், ஹார்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்திக் பகிர்ந்த பதிவில் அவரது மொபைல்போனில் 07.07 என நேரம் காட்டப்படுகிறது. 7 என்பது தோனியின் ஜெர்ஸி எண். பாண்டியாவும் தோனியின் மிகப்பெரிய ரசிகர் என்பதால் அவர் சிஎஸ்கேவுக்கு வர வாய்ப்பிருக்கிறதென ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஹார்திக் பாண்டியாவின் இன்ஸ்டா பதிவு.

ஹார்திக் பாண்டியாவின் இன்ஸ்டா பதிவு. - படம்: இன்ஸ்டா / ஹார்திக் பாண்டியா.

ஜடேஜாவை விட்டுக்கொடுத்து சஞ்சு சாம்சன் இப்படித்தான் சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்டார். அதேபோல ஷிவம் துபேவுக்கு மாற்றாக ஹார்திக் பாண்டியா இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Hardik Pandya 07 and 07 phone wallpaper its indicate to csk transfer from Mumbai Indians

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.