
ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓரங்கட்டப்படும் ஹார்திக் பாண்டியா?
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓரங்கட்டப்படும் ஹார்திக் பாண்டியா குறித்து...

ஃபீல்டிங்கை மாற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா. - படம்: ஏபி
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கேப்டன் ஹார்திக் பாண்டியா ஓரங்கட்டப்படுவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள்.
தொடக்கத்தில் மும்பையில் இருந்து குஜராத் அணிக்கு கேப்டனாகச் சென்ற ஹார்திக் பாண்டியா முதல் சீசனில் கோப்பையும் இரண்டாவது சீசனில் ரன்னர் அப் ஆகவும் மாறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, ஹார்திக் பாண்டியாவை 2023ல் நியமித்தது. 2024 சீசன் மோசமாக சென்றது. 2025 சீசனில் பிளே ஆஃப் வரைக்கும் முன்னேறி பஞ்சாப் அணியிடம் தோற்றது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மும்பை 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதில் பாண்டியா தலைமையில் 2 போட்டிகளிலும் சூர்யகுமார் தலைமையில் ஒன்றிலும் வென்றுள்ளன.
இந்த சீசனில் கடைசி 2 போட்டிகளில் பாண்டியா விளையாடவில்லை. அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாக பயிற்சியாளர் தெரிவித்திருந்தார். முன்னதாகவும் ஒரு போட்டியில் அவர் களமிறக்கப்படவில்லை. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஹார்திக் பாண்டியா இந்த சீசனில் சுமாராகவே விளையாடியுள்ளார். தலைமைப் பண்பிலும் விமர்சனங்கள் இருக்கின்றன. அதேபோல் வீரர்களும் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர் மும்பை இந்தியன்ஸ் பக்கத்தை இன்ஸ்டாவில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியது. பின்னர், சிறிது நேரத்தில் மீண்டும் அவர் பின் தொடர்வதாகக் கூறப்பட்டது. இந்த சீசனுடன் அவர் மும்பை அணியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hardik Pandya unfollowed mumbai Indians and all the team members and also deleted all his posts related to Mumbai Indians.
— Courageous (@CourageousRo) May 10, 2026
Is it freedom for Core MI fans like us from this blck anaconda??? ðâ¤ï¸ pic.twitter.com/tFOCqUmRZT
Summary
IPL 2026: Is Hardik Pandya Being Sidelined at Mumbai Indians?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






