உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திலக் வர்மாவிடம் பேசியது என்ன? ஹார்திக் பாண்டியா விளக்கம்!

திலக் வர்மாவிடம் பேசியது பற்றி மனம் திறந்த ஹார்திக் பாண்டியா குறித்து...

Mumbai Indians' Tilak Verma, right, celebrates his fifty runs with captain Hardik Pandya during the Indian Premier League cricket match between Gujarat Titans and Mumbai Indians in Ahmedabad, India, Monday, April 20, 2026.(AP Photo/ Ajit Solanki )

திலக் வர்மாவுக்கு வாழ்த்து கூறிய ஹார்திக் பாண்டியா. - படம்: ஏபி

Published On :

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா சக வீரர் திலக் வர்மாவிடம் பேசியது குறித்து போட்டிக்குப் பிறகு விளக்கம் தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றிரவு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 199/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய குஜராத் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் திலக் வர்மா முதலில் 22 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தவர், ஹார்திக் பாண்டியாவின் உத்வேக பேச்சுக்குப் பிறகு, அடுத்த 23 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். மொத்தமாக, 45 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.

சமூகவலைதளத்தில் ஹார்திக் பாண்டியாவின் ஆரா (aura) குறித்து மிகவும் புகழ்ந்து பேசிவருகிறார்கள். அப்படி என்னதான் பேசியிருப்பார் என அனைவரையும் வியக்க வைத்தது. போட்டிக்குப் பிறகு, இது குறித்து ஹார்திக் பேசியிருப்பதாவது:

திலக் வர்மாவிடம் இருக்கும் திறமைக்கு அவர் பெரிதாக கவலைப்படவே தேவையில்லை. நான் ஒரேயொரு செய்தியை மட்டுமே அவரிடம் திரும்ப திரும்ப சொல்லினேன். உன்னிடம் திறமை இருக்கிறது, பந்தைப் பார்த்து அடி. பந்து திரும்பினாலும் கவலையில்லை. ஏனெனில், அவரது பேட்டில் பந்து பட்டால் அது சிறப்பாக பயணிக்கும் என நம்புகிறேன் என்றார்.

அதிகமாக நான் பேசியதால் எனகுத் தலைச் சுற்றல் வந்தது. ஆனால், அது திலக் வர்மாவுக்குத் தேவைப்பட்டது. மும்பை இந்தியன்ஸுக்கு தேவைப்பட்டது. அந்த மாதிரியான ஒரு ஆற்றல் கேப்டனாக அணிக்கு அளிக்க வேண்டியிருந்தது என்றார்.

Summary

Hardik Pandya reveals his secret tip to Tilak Varma en route his maiden IPL century: ‘Watch the ball and…’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.