மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 223 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது.

News image

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆர்சிபி முதலில் பேட் செய்தது.

வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி அரைசதம்!

முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, விராட் கோலி 37 பந்துகளில் 58 ரன்களும் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), தேவ்தத் படிக்கல் 25 பந்துகளில் 45 ரன்களும் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர். டிம் டேவிட் 12 பந்துகளில் அதிரடியாக 28 ரன்கள் (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்பிரித் பிரார் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சஹால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

Summary

Batting first in their IPL match against Punjab Kings, Royal Challengers Bangalore scored 222 runs for the loss of 4 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.