பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்

திமுக தோல்விக்கு வெளியே காரணம் தேடாதீர்கள் என முதல்வர் விஜய் பேசியது குறித்து...

Chief Minister joseph Vijay

முதல்வர் சி. ஜோசப் விஜய் - யூடியூப்

Published On :

திருச்சி கிழக்கு தொகுதியில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவதாகவும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 1) கேட்டுக்கொண்டார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு, வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜோசப் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு வேட்பாளர் குறித்து முதல்வர் விஜய் பேசியதாவது:

''மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் இல்லை, மாநில சுயாட்சியிலும் எந்தவொரு சமரசமும் இல்லை. 234 தொகுதிகளும் நமது தொகுதிதான். எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் நமது ஆட்சி அங்கு இருக்கும்.

உங்களுக்கு (திமுக) ஓட்டு போட்டால் நல்லவர்கள், தவெகவுக்கு வாக்களித்தால் கெட்டவர்களா? கடந்த முறை இவர்கள்தானே உங்களுக்கு வாக்களித்தனர். இல்லை, உங்களுக்கு மட்டும் வேற்று கிரகத்தில் இருந்து வாக்குகள் வருகிறதா?

எதிர்காலத் தேர்தல்களில் மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள், நான் மக்களுக்கு நல்லது செய்துகொண்டே இருக்கிறேன்.

ஊழல் இல்லாத லஞ்சம் இல்லாத ஆட்சியை வழங்குவேன். தவெக ஆட்சி அமைத்துவிடக் கூடாது என திமுகவும் மற்றும் பலரும் சேர்ந்து என்னென்ன வேலைகள் செய்தார்கள் என்பதை அந்த 5 நாள்களில் பார்த்திருப்போம்.

பதவிபோன சோகத்தில் அறிக்கையாக விட்டுத்தள்ளுகிறார் மு.க. ஸ்டாலின். மக்களுக்கு தொந்தரவாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூடினேன்'' என விஜய் பேசினார்.

Summary

I will field a common man as the candidate in Trichy East: Chief Minister joseph Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.