ரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்திருச்சியில் முதல்வர் விஜய் சாலைவலம்!
/

தமிழ்நாடு

திருச்சியில் முதல்வர் விஜய் உரை - நேரலை

திருச்சியில் முதல்வர் ஜோசப் விஜய்யின் உரை...

திருச்சியில் முதல்வர் விஜய் உரை -  நேரலை

முதல்வர் ஜோசப் விஜய் - TVK

Updated On :1 ஜூன் 2026, 5:21 pm IST
11:09 am, 1 ஜூன் 2026

முதல்வர் விஜய் சாலைவலம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் சாலைவலம் மேற்கொண்டுள்ளார்.

11:09 am, 1 ஜூன் 2026

வரவேற்ற துரை வைகோ

சென்னையில் இருந்து திருச்சி சென்ற முதல்வர் விஜய்க்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி எம்.பி., துரை வைகோ முதல்வர் விஜய்யை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

11:10 am, 1 ஜூன் 2026

திருச்சி தொகுதி என்றுமே என் இதயம்

தேர்தல் ஆணையத்திற்கு நான் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனால், திருச்சி தொகுதி என்றுமே என் இதயமாக இருக்கும் - திருச்சியில் விஜய் பேச்சு

11:11 am, 1 ஜூன் 2026

கல்யாண வீட்டில் கூட புலம்புகிறார்கள் : விஜய்

6 மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று கூறினார்கள், ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற அரை மணி நேரத்தில் ஆரம்பித்துவிட்டார்கள். கல்யாண வீட்டில் கூட புலம்புகிறார்கள் - திருச்சியில் விஜய் பேச்சு

11:12 am, 1 ஜூன் 2026

தற்குறிகளே கேள்விக்குறியாக்கிவிட்டனர்

தற்குறி என்று திமுகவினர் கூறினார்கள். தற்குறி என்று கூறிய உங்கள் அரசியல் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிட்டனர்: திருச்சியில் விஜய் பேச்சு

11:13 am, 1 ஜூன் 2026

திமுக தோல்விக்கு யார் காரணம்?

அண்ணா ஆரம்பித்த கட்சியை அடிமை கட்சியாக்கிவிட்டு, உடன்பிறப்பே வெளியே வா என்று கூறுகிறார் மு.க. ஸ்டாலின். திமுக தோல்விக்கு வெளியே காரணம் தேடாதீர்கள். உங்கள் வீட்டில் தேடுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களே திமுக தோல்விக்கு காரணம் : திருச்சியில் விஜய் பேச்சு

11:15 am, 1 ஜூன் 2026

மக்களை ஏமாற்ற வேண்டாம்

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு மக்கள் மனதை வெல்ல பார்க்க வேண்டும். அதை விடுத்து மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

11:16 am, 1 ஜூன் 2026

திமுக மாடல் அரசில் போதைப்பொருள்

நிதி நெருக்கடி ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். அதை சரி செய்ய வேண்டாமா? அதை சரி செய்துவிட்டு பிறகு களத்தில் இறங்குகிறேன்.

திமுக மாடல் அரசில் ஒரு தெருவிடாமல் போதைப்பொருள் கலாசாரம் கொட்டிக்கிடக்கிறது. இதை முன்பே செய்திருந்தால், பெண்களுக்கு அநீதி நடந்திருக்குமா?

11:18 am, 1 ஜூன் 2026

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்

தகுதி வாய்ந்த அதிகாரிகளை காவல் துறையில் நியமித்திருக்கிறேன். என்ன பழி போட்டாலும் உண்மையாக உறுதியாக மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்துகாட்டுவேன். அவர்கள்தான் ஆட்சியிலேயே இல்லையே. அவர்களை ஏன் குறை கூறுகிறீர்கள் என்று சிலர் பேசுவார்கள். அவர்களுக்கு தவறு செய்தது யார் என்று எடுத்துக் கூற வேண்டும் இல்லையா?

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் ஒன்றாக சேர்ந்து யாருக்கும் தெரியாமல் மூலையில் அமர்ந்து பேரம் பேசி ஆட்சி அமைத்து கொள்ளை அடிக்க திட்டமிட்டனர்.

11:21 am, 1 ஜூன் 2026

திருச்சி கிழக்கில் சாமானியனை நிறுத்துவேன்

பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டுமே எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. திருச்சி கிழக்கு என் செல்லப் பிள்ளை மாதிரி. வரும் இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரையே வேட்பாளராக நிறுத்தப்போகிறோம். விஜய்யை வெற்றிபெற வைத்ததைப்போல, இடைத்தேர்தலில் நான் முன்னிருத்தும் சாமானியரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

11:21 am, 1 ஜூன் 2026

தமிழக மக்களுக்கு நன்றி 

என்னை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கும் திருச்சி கிழக்கு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம்.

11:50 am, 1 ஜூன் 2026

சிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்

சிறந்த காவல் துறை அதிகாரிகள் அடங்கிய சிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும். வழக்குகள் அனைத்து விரைவாக விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை விரைவாக தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை - முதல்வர் விஜய்.

11:51 am, 1 ஜூன் 2026

தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்று திமுக நினைத்தது! முதல்வர் விஜய் பேச்சு

தமிழ்நாட்டில் திமுக - தவெக இடையேதான் போட்டி என்றும் தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்று திமுக நினைத்ததாகவும் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.