முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தமிழ்நாட்டில் 76% மக்கள் திமுகவுக்கு எதிராக தீர்க்கமான முடிவு: முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் திமுக தேவையில்லை என 76% மக்கள் தீர்க்கமான முடிவெடுத்ததாக முதல்வர் விஜய் பேச்சு

News image

உதயநிதி | விஜய் - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 5:09 pm IST

தமிழ்நாட்டில் திமுக தேவையில்லை என 76% மக்கள் தீர்க்கமான முடிவெடுத்ததாக முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசியுள்ளார்.

திமுகவை தவெக அதிகளவில் வாக்கு சதவிகிதம் பெற்றதாகக் கூறி, முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி திமுக எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?

இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் திமுக சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், திமுக மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் திமுக.

சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் தவெக 35 சதவிகிதம் எனில், திமுக 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் திமுகவே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.

இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

76% of the people have taken a decisive stand against the DMK: Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.