டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம் அறிவித்திருப்பது பற்றி...

அபிஜித் திப்கே.

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே. - படம் - இன்ஸ்டாகிராம் (சிஜேபி).

Published On :

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே வரும் ஜூன் 6 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருவதாகவும், நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, போராட்டம் நடத்த இருப்பதாகவும் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர்.

தொடங்கிய சில நாள்களிலேயே, அதன் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. இதனையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.

முடக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் புதியதொரு எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்டது. அந்தக் கட்சி சில நாள்களுக்கு முன்பு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே வெளியிட்டிருக்கும் விடியோ ஒன்றில் பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பின் வழியைப் பின்பற்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, அமைதியான முறையில் நமது குரல்களை எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல்களை எழுப்பினால், நிச்சயமாக நமது குரல்களுக்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

நான் வரும் ஜூன் 6 ஆம் தேதி காலையில் தில்லிக்கு வர உள்ளேன். தயவுசெய்து, விமான நிலையத்தில் என்னுடன் வந்து சேருங்கள். அங்கிருந்து நாம் ஒன்றாக நாடாளுமன்றத் தெருவில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று, ஜந்தர் மந்தரில் அமைதியான போராட்டம் நடத்த அனுமதி கேட்போம் என்று அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் கொடுக்கப்பட்ட நீட் வினாத்தாள், தேர்வுக்கு முன்பே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டது. எனவே அந்தத் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கான தேதியாக வரும் ஜூன் 21-ஐ தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இதனால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Abhijit Dipke, leader of the Cockroach Janta Party, announced on Monday that he is traveling from the United States to India and plans to stage a protest demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan over the NEET issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.