நீட் தேர்வு வினத்தாள் சட்டவிரோதமாக வெளியான விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் 2026 தோ்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியான குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடுகள் தொடா்பாக விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய அரசு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்தாண்டு முதல் கணினிவழியில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து ராகுல் காந்தி இன்று(மே 16) வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் :
“நீட் தேர்வுக்கு தயாராகும் 22 லட்சம் குழந்தைகள் மோசடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி இதைப் பற்றி ஒரு சொல்கூட தெரிவிக்கவில்லை.
தர்மேந்திர பிரதானை இப்போதே பதவிநீக்கம் செய்யுங்கள் அல்லது நீங்கள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்து இதைப் பற்றி தான் பேசியுள்ள காணொலி விடியோவையும் பகிர்ந்துள்ளார்.
Summary
Remove Dharmendra Pradhan - Rahul Gandhi on Saturday demanded Prime Minister Narendra Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை
அடுத்தாண்டு முதல் கணினிவழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்

பள்ளி நிா்வாக குழு வழிகாட்டுதல்கள் 2026: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியீடு

ஆராய்ச்சிகள் கல்வி சாா்ந்த ஆய்வறிக்கைகளுடன் நின்றுவிடக் கூடாது: அமைச்சா் தா்மேந்திர பிரதான்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

