கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!

பெட்ரோல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது பற்றி...

Centre Raises Petrol Export Duty To Rs 3 per Litre, Cuts Levies On Diesel, ATF

கோப்புப் படம் - PTI

Published On :

இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்காசிய போரினால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சவால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் பிற காரணிகளால் நாடெங்கிலும் பெட்ரோல், டீசல் நேற்று (மே 15) அதிகாலை உயர்த்தப்பட்டது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 2.83 உயர்த்தப்பட்டு ரூ. 103.67-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.86 உயர்த்தப்பட்டு ரூ. 95.25-க்கும் விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் நரேந்திர மோடி உயர்த்தியுள்ளதாக நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதையடுத்து இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேநேரத்தில் டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.

டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி, லிட்டருக்கு ரூ. 23 - லிருந்து ரூ. 16.50 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி, லிட்டருக்கு ரூ. 33 -லிருந்து ரூ. 16 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட இந்த வரி விகிதங்கள் இன்று(மே 16) முதல் அடுத்த 15 நாள்களுக்கு அமலில் இருக்கும் என்றும்

அதேநேரத்தில் உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Centre Raises Petrol Export Duty To Rs 3 per Litre, Cuts Levies On Diesel, ATF Effective May 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.