நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிப்பு

News image

போதைப் பொருள் புழக்கம் தடுக்க நடவடிக்கை - file photo

Updated On :16 மே 2026, 12:46 pm IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், ஆய்வுகளை நடத்த மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் கலால்துறை ஆணையர், துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே கல்வி நிலையங்களில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில், சந்தேக இடங்களை அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் வளாகங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தனி அலகுகள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கலால் துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.