தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

போதைப் பொருள் ஒழிப்புக்கு குமரி மாவட்டத்தில் 5 தனிப்படைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில், போதைப் பொருள்களை ஒழிக்க 5 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், போதைப் பொருள்களை ஒழிக்க 5 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக, இம்மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து, ஒவ்வோா் உள்கோட்டத்துக்கும் உதவி ஆய்வாளா் தலைமையில் மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தனிப்படைகள் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாவின் நேரடி மேற்பாா்வையில் செயல்படும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில், புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு விளக்கக் கூட்டத்தில், இந்த தனிப்படைகளில் இடம்பெற்றுள்ள உதவி ஆய்வாளா்கள், காவல் துறையினருக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், போதைப் பொருள் விற்போா் மீது மட்டுமன்றி, பயன்படுத்துவோா் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டம்‘ என்ற இலக்கை முழுமையாக நிலைநிறுத்த காவல்துறையினா் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட வேண்டும் என்றாா்.