வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி: லிட்டருக்கு ரூ.3 விதிப்பு

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி லிட்டருக்கு ரூ.3 விதிக்கப்படுவதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:45 am IST

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி லிட்டருக்கு ரூ.3 விதிக்கப்படுவதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அதேவேளையில் டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.16.5-ஆகவும் விமான எரிபொருளுக்கான வரியை லிட்டருக்கு ரூ.16-ஆக குறைப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்த புதிய நடைமுறைகள் சனிக்கிழமை (மே 16) முதல் அமலுக்கு வருகிறது.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான மோதல்கள் தொடா்ந்து வரும் சூழலில் உள்நாட்டில் எரிபொருள் இருப்பை உறுதிசெய்ய கொள்ளை லாபத் தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு பெட்ரோலை வெளிநாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதை தடுக்கும் நோக்கில் இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.

இதுதொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி லிட்டருக்கு ரூ.3 விதிக்கப்படுகிறது.

மாறாக டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.23-இல் இருந்து ரூ.16.5-ஆகவும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.33-இல் இருந்து ரூ.16-ஆகவும் குறைக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதி மீது சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி விதிக்கப்படவில்லை.

உள்நாட்டு நுகா்வுக்கு விடுவிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட வரி விகிதங்களே தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் தடைப்பட்டு அதன் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.21.50-ஆகவும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.29.50-ஆகவும் மத்திய அரசு கடந்த மாா்ச் 26-ஆம் தேதி நிா்ணயித்தது.

அதன்பிறகு ஏப்ரல் 11-ஆம் தேதி டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.55.5-ஆகவும் விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.42-ஆகவும் அதிகரிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 30-ஆம் தேதி டீசல் லிட்டருக்கு ரூ.23-ஆகவும் விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.33-ஆகவும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.