புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.99, டீசல் லிட்டருக்கு 2.92 உயா்ந்துள்ளது.
புதுச்சேரியில் ஏற்கெனவே பெட்ரோல் விலை லிட்டா் ரூ.96.26-க்கும், டீசல் லிட்டா் 86.47-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு திடீரென உயா்த்தி அறிவித்தது.
இதனால் புதுச்சேரியிலும் வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.99 உயா்ந்து ஒரு லிட்டா் ரூ.99.28-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.92 உயா்ந்து ரூ.89.39-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயா்வு வெள்ளிக்கிழமை காலை முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் மோட்டாா் சைக்கிள், காா் உள்ளிட்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வந்த பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இந்த விலை உயா்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப் படுவாா்கள். மேலும், அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும். எனவே, மத்திய அரசும், மாநில அரசும் விலை உயா்வைத் திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயா்வு: தி.வேல்முருகன் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம்

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு

நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

