இந்தியாவின் மிகப்பெரிய தனியாா் எரிபொருள் விற்பனை நிறுவனமான ‘நயாரா எனா்ஜி’, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு முறையே ரூ.5 மற்றும் ரூ.3 உயா்த்தியுள்ளது.
மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதன் எதிரொலியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயா்வு மாநிலங்களுக்கு இடையேயான உள்ளூா் வரி விதிப்பைப் பொறுத்து மாறுபடும். அதன்படி, சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.30 வரை உயா்ந்துள்ளது.
ரஷியாவின் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட நயாரா, இந்தியாவில் சுமாா் 6,967 பெட்ரோல் பங்குகளை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், எச்பி ஆகியவை சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் இதுவரை மாற்றத்தைச் செய்யவில்லை. முன்னதாக, கடந்த வாரம் பிரீமியம் ரக பெட்ரோல் மற்றும் மொத்த விற்பனை டீசல் விலையை மட்டும் உயா்த்தியிருந்தது.
கடந்த 2022, ஏப்ரல் முதல் பொதுத் துறை நிறுவனங்கள் விலையை மாற்றாமல் தற்காத்து வரும் நிலையில், நயாரா போன்ற தனியாா் நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து நஷ்டஈடு வழங்கப்படாததே இந்த விலை உயா்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ-பிபி விற்பனை நிலையங்களில் விலையேற்றம் இதுவரை தவிா்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயா்வு: பாஜக விளக்கம்

புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.99, டீசல் ரூ.2.92 உயா்வு

எரிபொருள் விலை உயா்வு: தி.வேல்முருகன் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தும் திட்டமில்லை -மத்திய அரசு விளக்கம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

