2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

கரப்பான்பூச்சி கட்சியின் எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்தது குறித்து...

CJP

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி - படம் - எக்ஸ்

Published On :

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்க தற்போதைய நிலையில் மறுப்பதாக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர்.

தொடங்கிய சில நாள்களிலேயே, அதன் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. இதனையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.

முடக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் புதியதொரு எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்டது.

இருப்பினும், அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அபிஜித் திப்கே மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை இன்று, விசாரித்த நீதிபதி புருஷைந்திர குமார் கௌரவ், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே காணொளி வாயிலாக ஆஜராகவ அனுமதி அளித்தார்.

விசாரணை முடிந்த பிறகு, நையாண்டி டிஜிட்டல் அமைப்பான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்க தற்போதைய நிலையில் மறுப்பதாகவும், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் ஒரு மறுஆய்வுக் குழுவை அமைப்பதாகவும், இவ்விவகாரத்தை ஆராய்ந்து, வரும் ஜூலை 7ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

மேலும், இந்தக் குழுவின் ஆய்வு அறிக்கைக்குப் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Summary

The High Court stated on Friday that, at this juncture, it declines to lift the ban on the X account of the Cockroach Janta Party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.