வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இணையதளம், இன்ஸ்டா பக்கங்கள் ஹேக்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இணையதளம், இன்ஸ்டா பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டது பற்றி..

News image

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி - x

Updated On :23 மே 2026, 12:45 pm IST

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தன்னுடைய இன்ஸ்டா மற்றும் கட்சியின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த நையாண்டி கட்சியின் பிரசாரம் நேற்று வைரலாகி லட்சக்கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், இணையதளமே ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய அளவில் இந்த ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய பல்வேறு சமூக வலைத்தளங்களும் இதன் மூலம் முடக்கப்பட்டிருப்பதாகவும் தீப்கே குற்றம்சாட்டியிருக்கிறார்.

தீப்கே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பக்கம் முடக்கப்பட்டது, இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டர் கணக்கும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் இருந்த மற்றொரு கணக்கும் முடக்கிவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எந்த சமூக வலைத்தளப் பக்கங்களையும் எங்களால் இயக்க முடியவில்லை. எனவே, அதில் ஏதேனும் பதிவுகள் வந்தால், அது அதிகாரப்பூர்வ தகவலாக இருக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியிருந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியவரும், போஸ்டர் பல்கலை முன்னாள் மாணவருமான தீப்கே, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி என்ற நையாண்டி கட்சியைத் தொடங்கினார். அதில் பல ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாகினர். அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் லட்சக்கணக்கானோர் இணைந்தனர்.

இது நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில் 2 நாள்களுக்கு முன்பு அதன் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.

Summary

Cockroach Peoples Party website, Instagram pages hacked

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.